என் எழுத்து

திங்கள், 23 ஆகஸ்ட், 2010

கவிதை


உயிர்க்களை உள்ளது கவிதை
உண்மை சொல்வது கவிதை

பொய்கள் நாண வருவது கவிதை

பஞ்சம் கண்ட போதிலும்
பசிப்பிணி கண்ட போதிலும்

வஞ்சம் கண்ட போதிலும்
வன்கொடுமை கண்ட போதிலும்
அண்டங்கிழிப்பது கவிதை
பூமி அதிர வருவது கவிதை 

அவள்தான் அன்னை மஹாசக்தி
அகிலம் படைத்தவள் அவளே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக