என் எழுத்து

திங்கள், 23 ஆகஸ்ட், 2010

[ எச்சங்கள்...]


1.

சாலையோரம் குப்பைக் காகிதம் பொறுக்கும் பெண்ணின்
உடுப்பின்றிக் கிழிந்துபோன உள்ளம்.

மதங்கள் என்ன செய்தன ???

மனங்கள் என்ன செய்தன ???

கல்லெறிவதைத் தவிர.

                2.

சாலையின் குறுக்கே ஓடிய
அணிலின்

முதுகில்
வாலின் துவக்கத்தில்

ஓங்கி மிதித்த காரின் முன்னங்கால்...

அழுத்தம் தாளாது பிதுங்கிய
கண்களின் ஓரத்துத் தசைகளில்

மூக்கில் வாயில் காதுகளில்
பொங்கிய செங்குருதி...

இயற்கையின் பச்சை இரத்தம்.

உலகினை அழிக்கப் பிறந்த
மனிதனே

நில!; கவனி! நிதானி! சிந்தி!

இன்னும் உலகம் அழியும் காலம்
வரவில்லை.

உன் மக்கள் கூட்டம்
முழுதாக அழிந்துபோன நிலையில்,

நீ மட்டுமே தன்னந் தனியே
எஞ்சி நின்ற நிலையில், 

இயற்கையின்
சளசளத்த மௌனத்தின்..
ஓயாத கேள்விகளுக்கு ???
என்ன பதில் வைத்திருக்கிறாய்... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக