1.
கனவுகள்
நெஞ்சில் நெருப்பாய்ச்
சுடுகின்ற வேளையில்..
மெலிந்த
கோடைக் காலத்து ஓடையாய்
நனவுகளின் நீண்ட நடைப் பயணம்...
2.
பழம் நினைவுகளாய்
நீண்டு கிடக்கும்
கோடைக் காலத்துச் சாலைகளில்
வியர்த்துப் புழங்கிப்
பன்னெடுந்தூரம் கடக்கையில்
ஒரு விநாடி
நிழல் ஒதுங்கக்
கிடைத்த
ஒரு நனவு மரம்,
எத்தனையோ கோடி கனவுகளில்
ஒரு துளி நிறைந்ததென்று தேற்றும்.
3.
சில விநாடிகளில்,
மீண்டும் கிளைதாவும் குரங்குபோல் மனம்.
கனவே, கனவே,
காலத்துள் அடங்காத கனவே,
நீ
காலத்தில் சிக்கினாய்
கழிவதெப்போது ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக