என் எழுத்து

திங்கள், 23 ஆகஸ்ட், 2010

சாரல்

மழையின் துளிகளின்
ஓசைகளுக்கிடையே பிறந்த
சலசலத்த மௌனம்.

நெடிதுயர்ந்த மலைகளின்
முகடுகளில் சிகரங்களில்
பட்டுத்தெறித்து மோதும்
பேரருவிகளின் ஊற்றுகளின்
தாய்.

வானத்தையே வில்லாக வளைக்கும்
வல்லமையுள்ள வண்ணச்
சிற்பி.

மழைக்காலத்தே,
உலகமெலாம்,
புற்றீசல் போலப் பரவி

தண்ணென,

உயிர்களின் நாசிகளுள்
நுழைந்து

புற்களிண் மடிமேல்
தவழ்ந்து,

வறண்ட தொண்டையில்
பொழிந்த பனிமழைபோல் 


வானத்திலிருந்து பூமிமேல்
வலிந்து பொழியும்
வண்ண உயிர்ப் பூக்கள். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக