1.
பிரபஞ்சங்களின்..
உலகங்களின்..
இயக்கங்களின்..
தாய்.
2.
கள்ளுண்டு மயங்கிக் கிடந்தேன்,
காலம் கடந்து சென்றது...
கண்விழித்த போதெல்லாம்,
காலம் கடித்துத் தின்றது.
காலம் கடித்த காயங்கள்,
வடுக்களாய் உடலெங்கும்...
வடுக்களை எண்ணி.. எண்ணி..
காலம் கணக்கிட்டுக் கடந்தேன்.
இன்னும் வராத காயங்களில்,
பூத்த மலர்கள் காலைப் பனித்துளி சூரிய உதயம்
மாலையின் நிழல்கள் என,
உலகம் கடந்து சென்றது...
ஈரம் காயாத உணர்வுகளில்
இன்னும் விடியாத பொழுதுகள்,
வெளிச்சம் தேடும் வேட்கை என,
வாழ்க்கை நகா¢ந்து சென்றது.
3.
இந்த இடத்திலேயே
நின்று போனது என் வாழ்வு.
பலகோடி யுகங்களுக்கு முன்பும்
இப்படியே...
கல்லாய்.. சிலையாய்.. மரமாய்..
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு
நகராமல் நின்றிருந்தது என் வாழ்வு.
நீடித்த ஆயுளோடு.
முடியவே இல்லை என் பயணம்
நின்றபடி.. நடந்தபடி.. பறந்தபடி..
என்றும் முடிந்ததே இல்லை
எனது பயணம்.
இதுவரையிலும் என்னைத் தொட்டதும்
தொடா¢ந்ததும் எதுவும் இல்லை
என் கனவுகளைத் தவிர.
4.
என்
புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும்
காலத்தின் பக்கங்களையே புரட்டுகிறேன்.
என்
எழுந்து, நிமிர்ந்து அசையும்
ஒவ்வொரு அசைவிலும்
காலத்தின் அசைவுகள்.
என் ஆற்றல் செலவழிப்புகளிலெல்லாம்
காலத்தின் மின்சாரம் செலவழிய,
காலத்தைப்பற்றி எழுதும்போது மட்டும்
ஏனோ,
காலம் நின்றுபோகிறது.
5.
உலகம் முழுவதும்
காலம்,
பொடிபோல், நுண்துகள் போல் பரவியிருக்க,
காணும் பொருள் அனைத்தின்மீதும்
போர்வைபோல் மூடியிருக்க,
ஏதைத் தொட்டாலும் காலத்தையே தொடுகிறேன்,
என்று எண்ணத் தோன்றுகிறது.
6.
காலத்தைக் கேட்டேன்.
காலமே.. காலமே..
காலமற்ற வெளியுண்டோ ?
காலம் சொன்னது.
காலனுக்கு வாழ்க்கைப்பட்டுக்
காலமுண்ணும் மானுடா,
காலமற்ற வெளியெலாம்
காலமே படைத்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக