என் எழுத்து

திங்கள், 23 ஆகஸ்ட், 2010

வாழ்க்கை

1. 

எண்ணங்களால் எண்ணப்பட்ட 
என் 
நாட்கள்.. 
விலைபோயின. 

எண்ணங்களால் 
எண்ணப்பட முடியாத 
என் 
சுவர்க்கங்கள்... 

அவற்றுக்காகவே 
நான் 
உயிர் வாழ்ந்தேன்... 

விலைமதிக்க முடியாத 
என் 
சுவர்க்கங்கள்... 
மிக மலிவாக 
சந்தையில் 
கூவி விற்கப்பட 
நானும் 
மந்தையில் ஒருவனானேன். 

எழுதல், நகர்தல், நிமிர்தல் 
என 
வியர்வைக் கசகசப்போடு 
வாழ்க்கை 
நகர்ந்து சென்றது... 


2. 

கொட்டிக் கிடக்குது வைரம்... 
உலகம் முழுவதும்... 

காற்றிலும்... 
மழையிலும்... 
வானிலும்... 
பூமியிலும்... 

அள்ளியெடுக்க நேரமில்லாது 
முடிகிறது வாழ்க்கை.





3.



நீண்டு கிடந்தது
என் இரவு.

நொடி நொடியாய்..
அணு அணுவாய்..
ரசித்தபோது.

நீண்டு கிடந்தது
என் இரவு.

சுடு மணலாய்க்..
கொடு நரகாய்..
தகித்தபோது.

இரவில்
என் நீண்ட வானில்
என் அனுபவங்களின் திரட்சியாய்
மேகங்கள்.

நட்சத்திரங்களின் ஒளிப்பாதையை
மறித்தபடி, 


மெளனத்தின்
மெல்லிய விரிப்பின் மடிப்புகளில்
நான் குழந்தையானேன்.

மெல்லச் சிரித்தது
நிலவு. 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக